ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பாகி வரும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி சேனல்களில் இந்திய தொலைக்காட்சி தொடர்கள் பல ஒளிபரப்பாகி வருகின்றன. இவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்திய தொடர்களை நிறுத்துமாறு அந்நாட்டு கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் நடனமாடுவது உள்ளிட்ட இஸ்லாமிய விரோத செயல்களை கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனும் தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.