Newsworld News International 0804 04 1080404060_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்: கிலானி!

Advertiesment
பாகிஸ்தான் பிரதமர் கிலானி பெனாசீர்
, வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (19:57 IST)
"பாகிஸ்தான் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படும். அனைத்து துறைகளும் சுதந்திரமாக செயல்படும்" என்று பிரதமர் கிலானி உறுதியளித்தார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் தந்தையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி நிறுவனருமான ஜுல்பிகார் அலி பூட்டோவின் நினைவு நாளான இன்று பிரதமர் யூசுப் ரஷா கிலானி தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, பூட்டோ அரசு ஒருமித்த ஆதரவு பெற்ற அரசியல் சாசனத்தை வழங்கியது என்று குறிப்பிட்ட கிலானி, "அந்த அரசியலமைப்பை பாகிஸ்தான் அரசு முழுமையாக செயல்படுத்தும். உச்சகட்ட அதிகாரித்தை பாராளுமன்றம் பெரும், நீதித்துறசுதந்திரமாக செயல்படும். அமைப்புகளை வலிமைப்படுத்துவோம்; சுதந்திரமான ஆட்சி நிலைநிறுத்தப்படும்.

மக்களின் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும். அதன்படி, அனைத்து அமைப்புகளும், நீதித்துறையும், பத்திரிக்கைகளும் சுதந்திரமாக செயல்படும்.

அரசியல் சாசனத்தை பாதுக்காக்க வேண்டும் என்படு நமது தேசிய கோரிக்கையாக உள்ளது. மக்களாட்சி பூட்டோவின் கனவு. அதை நாங்கள் நிறைவேற்றுவோம். மக்களின் ஒத்துழைப்போடு நாட்டை வலிமை மிக்க தாக்குவோம்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil