சீன அரசு திபெத்தில் மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட்டு, திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதம் நடக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி விடுத்துள்ள அறிக்கையில், "சீன அரசு திபெத்தில் மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட்டு, திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் திபெத்தில் அமைதியும் சுதந்திரமும் பறிக்கப்படக் கூடாது என்ற வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க உள்ளது" என்ற கூறியுள்ளார்.