Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்கார்லெட் உடல் பிரிட்டன் கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டது!

ஸ்கார்லெட் உடல் பிரிட்டன் கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டது!
, செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (15:20 IST)
கோவாவில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பிரிட்டன் இளம்பெண் ஸ்கார்லெட் கீலிங்கின் உடல் அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி கோவாவில் உள்ள அஞ்சுனா கடற்கரையில் 15 வயதேயான ஸ்கார்லெட் கீலிங் அரை நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்தார்.

அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று காவல்துறையினர் முதலில் தெரிவித்தனர். ஆனால், அவளது தாயார் பியோனா மாக்கெயோன், தனது மக‌ள் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு கொ‌ல்ல‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

இதையடு‌த்து, இரண்டாவது முறையாக நட‌ந்த உடற்கூறு பரிசோதனையில் ஸ்கார்லெட் பாலியல் பலாத்கார‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக சாம்சன் டிசௌசா, பிலாசிடோ கார்வெல்ஹோ ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், ஸ்கார்லெட்டின் உடலை அவளது தாயார் நேற்று இரவு மும்பையில் இருந்து பிரிட்டன் கொண்டு சென்றார்.

முன்னதாக அவர் கூறுகையில், "எனது மகளின் உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த நாடு செல்கிறேன். மீண்டும் கோவா வருவேன்" என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil