பாகிஸ்தான்- ஆஃப்கானிஸ்தான் எல்லையில் முகாமிட்டுப் பயிற்சி பெற்றுவரும் அல் காய்டா இயக்கப் பயங்கரவாதிகளால் அந்த இருநாடுகளுக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் ஆபத்து என்று சி.ஐ.ஏ. இயக்குநர் ஜெனரல் மைக்கேல் ஹைடன் கூறினார்.
வாஷிங்டனில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹைடன், "பாகிஸ்தான்- ஆஃப்கன் எல்லையில் அமெரிக்கப் படைகளோ, சி.ஐ.ஏ.வோ அல்லது எந்தஒரு அமெரிக்க நிறுவனமோ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பற்றி என்னால் பேச முடியாது.
ஆனால் அந்த எல்லையில் நிலவும் சூழலைப் பற்றி என்னால் எச்சரிக்க முடியும். அங்கு முகாமிட்டுவரும் அல் காய்டா இயக்கப் பயங்கரவாதிகளால் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு மட்டுமல்ல, பிற மேற்கத்திய நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் ஆபத்து" என்றார்.