Publish Date: Sun, 30 Mar 2008 (17:49 IST)
Updated Date: Sun, 30 Mar 2008 (17:49 IST)
ஈராக் தலைநகர் பாக்தாதில் அமெரிக்க விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் ஷியா பிரிவு தீவிரவாதிகள் 16 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் பாக்தாத் மற்றும் பாஸ்ரா நகரங்களில் ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கும் பன்னாட்டுப் படையினருக்கும் இடையில் கடுமையான மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க விமானங்கள் ஈராக் படையினருக்கு ஆதரவாக நடத்திய தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவப் பேச்சாளர் மேஜர் பிராட் லிக்டன் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Sun, 30 Mar 2008 (17:49 IST)
Updated Date: Sun, 30 Mar 2008 (17:49 IST)