நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தியவர்களின் மீது மர்ம ஆட்கள் இருவர் குண்டுவீசியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
காத்மாண்டில் இருந்து தென்கிழக்கே 125 மைல் தொலைவில் உள்ளது பிரசாத் நகர். பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் சொந்த ஊரான இங்கு பல்வேறு மதத்தினரும், அயல்நாட்டவர்களும் கலந்து வசிக்கின்றனர்.
இங்குள்ள மசூதி அருகில் மோட்டார் பைக்கில் வந்த இருவர் தொழுகை நடத்திவிட்டு வந்தவர்களின் மீது குண்டு வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
இத்தாக்குதலில் பொதுமக்கள் 2பேர் பலியானதுடன் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து பிரசாதி நகர் பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அருகில் உள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.