சீன அரசு வன்முறைகளைக் கைவிட்டு, திபெத்தில் அமைதி திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமைதிப் பேச்சில் ஈடுபடுமாறு சீனாவை சர்வதேச அமைப்புகள் வலியுறுத்த வேண்டும். திபெத்தியர்களிடம் அதற்கான சக்தி இல்லை. அவர்கள் வன்முறையில் ஈடுபடாதவர்கள்.
சில நூறு சீன ராணுவத்தினர் புத்த பிட்சுக்களின் ஆடைகளை களைந்ததாக கேள்விப்பட்டேன். அவற்றை ராணுவத்தினர் அணிந்துகொண்டு துறவிகளைப் போலத் தோற்றம் அளித்துள்ளனர். ஆனால், அவர்களிடம் வால் இருந்ததுள்ளது. இவ்வாறு மாறுவேடம் அணிந்து அவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
திபெத்தை தனியாக பிரிக்க நான் விரும்பவில்லை. சீன அதிகாரிகளுடன் இணைந்து திபத்தில் அமைதி திரும்ப உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளேன்" என்றார்.