Newsworld News International 0803 28 1080328013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேற்கு உகாண்டா பேருந்து விபத்‌தி‌ல் 40 பே‌ர் ப‌லி!

Advertiesment
மேற்கு உகாண்டா பேருந்து கிங்கோ லாரி
, வெள்ளி, 28 மார்ச் 2008 (12:37 IST)
மேற்கு உகாண்டாவில் நடந்த பேருந்து விபத்‌தி‌ல் நான்கு குழந்தைகள் உட்பட 40 பேர் பலியானார்கள்.

உகாண்டாவின் மேற்கு பகுதியில் 209 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிங்கோ என்னும் இடத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் முன்னே சென்ற லாரியை முந்திச் செல்ல முயற்சி செய்த போது பேருந்தில் தீ பற்றி கொண்டதாகவும், அதனால் விபத்து ஏற்பட்டதாகவும் காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், பலர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் 10 பேர் மட்டுமே சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவ‌ல்துறை‌யின‌ர் விபத்தில் காயமுற்றவர்களை அருகில் உள்ள மருந்துவமனையில் அனுமதித்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil