ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டிருந்த மறைந்த இந்தோனேஷிய அதிபர் சுகார்தோ நிரபராதி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சுகார்தோ இந்தோனேஷியாவின் அதிபராக இருந்த காலத்தில் அவர்மீது ஏராளமான ஊழல் குற்றச்சாற்றுக்கள் கூறப்பட்டன. ஆட்சி மாறியதும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் சுகார்தோ காலமானார். இருந்தாலும் அவர் மீதான வழக்குகள் தொடர்ந்து நடந்து வந்தன.
இந்நிலையில் சுகார்தோ நிரபராதி என்று நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியது.
அரசிற்கு ஏற்பட்ட இழப்புகளுக்காக சுகார்தோ தலைமையில் இயங்கி வந்த அறக்கட்டளை ரூ.5,600 கோடி நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.