ஈராக்கில் பன்னாட்டு ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் ஷியா பிரிவைச் சேர்ந்த 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாஸ்ரா நகரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்ய ராணுவத்தினர் முயன்றபோது இத்தாக்குதல் வெடித்தது என்று பாதுகாப்புப் படை பேச்சாளர் தெரிவித்தார்.
இதையடுத்து பாஸ்ரா நகரில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாஸ்ராவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்பதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, பாக்தாத் அருகில் குத் உள்ளிட்ட பகுதிகளை ஷன்னி பிரிவு தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அவற்றை மீட்க ராணுவத்தினர் போராடி வருகின்றனர்.