பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் அடிப்படையில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் அரசிற்கு உள்ள நல்லுறவுகள் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் ஜான் நெக்ரோபோன்டேவை சந்தித்துப் பேசுகையில் அதிபர் முஷாரஃப் இவ்வாறு உறுதியளித்ததாக பாகிஸ்தான் அயலுறவு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதுடன், அமெரிக்காவுடன் உள்ள வரலாற்று உறவுகளை ஜனநாயக அடிப்படையில் தொடரவும் முஷாரஃப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நெக்ரோபோன்டே, பாகிஸ்தானின் சமூகப் பொருளாதார மேம்பாடுகளில் அமெரிக்க அக்கறையுடன் உள்ளதாகவும், அதனடிப்படையில் வழங்கப்படும் உதவிகள் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார்.