Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனி மாநிலத்திற்கு இந்தியா சம்மதிக்காது: ‌சி‌றில‌ங்கா!

தனி மாநிலத்திற்கு இந்தியா சம்மதிக்காது: ‌சி‌றில‌ங்கா!
, செவ்வாய், 25 மார்ச் 2008 (18:29 IST)
தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைக்க இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது என்று ‌சி‌றில‌ங்க பிரதமர் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள அவர் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:

”விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிராபகரன் இந்தியாவின் சில பகுதிகள் உட்பட இலங்கையில் தமிழ் மாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இலங்கையில் தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைத்தால் அது இந்தியாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அதற்கு இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது. இந்தியா எப்போதும் இலங்கையின் பிராந்தியந்துடன் இருக்கவே விரும்புகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல் மோதல்கள் நீடித்து வருகின்றன. அதற்கு ராணுவ தீர்வை விரும்பவில்லை. அது நாட்டின் அரசியல், பொருளாதார சூழலுக்கு உகந்ததல்ல. சுயநலமிக்க தலைவரின் கீழ் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. இந்தியாவை மாதிரியாகக் கொண்டு இலங்கையில் 13-வது திருத்தத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளத” என்று விக்ரமசிங்க கூறினார்.

இஸ்ரேலில் சுற்றுப்பயணம் செய்த முதல் ‌சி‌றில‌ங்க பிரதமர் விக்ரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil