இந்தியாவிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ் ரீன் ஐரோப்பிய நகர மருத்துவமனை ஒன்றில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹோலிப்பண்டிகையான நேற்று தான் தனது கொல்கத்தா நண்பர்களுடன் இல்லாமல் போனது குறித்து தனது வருத்தங்களை வெளியிட்டுள்ளார் தஸ்லிமா.
"நான் தற்போது ஐரோப்பாவில் உள்ள ஒரு நகரின் மருத்துவமனையில் இருக்கிறேன், பாதுகாப்பு காரணம் கருதி மருத்துவமனையின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை" என்கிறார் தஸ்லீமா.
கடந்த நவம்பர் மாதம் முதல் தலை நகர் டெல்லியில் மறைவான இடமொன்றில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் தஸ்லிமா. இந்தக் காலக் கட்டங்களில் தான் இருதயப் பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் அவதியுற்று வந்ததாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தன்னை வீட்டுக்காவலில் வைத்திருந்தபோது தனது அடிப்படை உரிமைகளை மத்திய அரசு முடக்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.