Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐரோப்பிய யூனியனுக்கு பின் லேடன் எச்சரிக்கை

ஐரோப்பிய யூனியனுக்கு பின் லேடன் எச்சரிக்கை
, வியாழன், 20 மார்ச் 2008 (10:59 IST)
இஸ்லாம் இறைத்தூதர் முகமது நபி பற்றிய கேலிச்சித்திரம் குறித்து அல்-க‌ய்டா தலைவர் பின் லேடன் ஐரோப்பிய யூனியனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இணையதளம் ஒன்றில் பின் லேட‌னி‌ன் ஒ‌லிநாடா வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஒ‌லிநாடா‌வி‌ல் பே‌சியு‌ள்ள ‌பி‌ன்ல‌ேட‌ன், "வாடிகன் நகர போப்பும் ஈடுபட்டுள்ள இது போன்ற கேலிச்சித்திர வெளியீட்டநடவடிக்கைகளபுனிதப் போர் தொடர்வதையே எடுத்துரைக்கிறது, முஸ்லிம்களை சோ‌தி‌க்‌கி‌றீ‌ர்க‌ள், இதன் விளைவுகளை‌ப் பா‌ர்‌க்க பய‌ங்கரமானதாக இரு‌க்கு‌ம்" என்று கூ‌றியு‌ள்ளா‌ன்.

மேலும் ஐரோப்பாவை பெரிய ஈட்டி ஒன்று துளைப்பது போலவும், ஆங்காங்கே ரத்தம் கொட்டியிருப்பது போலவுமான ஒரு அனிமேஷன் படத்தையும் வெளியிட்டுள்ளது அல் க‌ய்டா.

மேலும் பின் லேடன் அமெரிக்க ராணுவத்தின் இராக் ஊடுருவல் குறித்தும், நபிகள் பற்றிய கேலிச்சித்திரம் குறித்தும் கூறுகையில், "எங்களது அமைதியான கிராமங்களில் குண்டுகளை வீசி எங்கள் குழந்தைகளையும், பெண்களையும் கொல்வதை விடவும் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது மிகப்பெரிய பாவமாகும்"

அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ஆப்கானையும், இராக்கையும் ஆட்டிப்படைக்கும் ஐரோப்பிய நாடுகள் இந்த கொடுஞ்செயல்களின் பயங்கவிளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil