இலங்கை வன்னியில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன், 16 படையினர் படுகாயமடைந்தனர்.
வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை)பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த மோதலிலும், கரம்பைக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலிலும் 4 படையினர் படுகாயமடைந்தனர்.
மன்னார் பறையனாலங்குளத்தில் நடந்த மோதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 11 பேர் படுகாயமடைந்தனர்.
மூங்கில்முறிச்சியில் நேற்று காலை 8:25 மணியளவில் நடந்த மோதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அதேபகுதியில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி படையினர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மணலாறில் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் நேற்று காலை நடந்த மோதலில் படையினர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இத்தகவல்களை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.