பாகிஸ்தான் நாடாளுமன்ற அவைத் தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு அவைத் தலைவர், அவைத் துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது.
இத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அவைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஃபாமிதா மிர்சா என்ற பெண் உறுப்பினர் வெற்றிபெற்றார்.
இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் நாடாளுமன்ற அவைத் தலைவராகத் தேர்வு செய்யப்படும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஃபாமிதா மிர்சா மருத்துவம் படித்தவர் என்பதும், அவரின் குடும்பமே அரசியல் சார்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஃபைசல் கரீம் குந்தியும் வெற்றிபெற்றார்.