Publish Date: Wed, 19 Mar 2008 (17:58 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (17:58 IST)
அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரிகள் தங்கியிருக்கும் 26 மாடிக் கட்டடத்திற்கு வரியாக ரூ.160 கோடி கட்ட வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இவ்வழக்கில், சர்வதேச உடன்பாடுகளின்படி தூதரக அதிகாரிகள் தங்கியிருக்கும் கட்டடங்களுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்ற இந்திய அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரத்தில் உள்ள 26 மாடிக் கட்டடத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் தங்கியுள்ளனர். இக்கட்டடத்திற்குக் கடந்த பல ஆண்டுகளாக வரி செலுத்தப்படவில்லை.
இதுகுறித்து நியூயார்க் நகர நிர்வாகம் கேட்டதற்கு, வியன்னாவில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சர்வதேச உடன்பாடுகளின்படி தூதரக அதிகாரிகள் தங்கியிருக்கம் கட்டடங்களுக்கு வரிவிலக்கு தர வேண்டும் என்று இந்தியத் தரப்பு கூறியது.
இதையடுத்து இந்த விவகாரம் நியூயார்க் நீதிமன்றத்திற்குச் சென்றது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெட் எஸ் ராக்காஃப், தூதரகத்தில் தலைமை அதிகாரி தங்கியிருக்கும் கட்டடத்திற்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்க முடியும் என்றும், குறிப்பிட்ட கட்டடத்தில் அலுவலகர்கள் மட்டுமே தங்கியிருப்பதால் ரூ.169 கோடி வரி கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.