திபெத் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சீனா பாராட்டுத் தெரிவித்துள்ளது.
"தலாய் லாமா தலைமையிலான திபெத் சுதந்திரப் போராளிகளை இந்தியா கையாண்ட விதத்தையும், இது தொடர்பாக இந்தியா அறிவித்துள்ள நிலைப்பாட்டையும் சீனா பாராட்டுகிறது" என்று அந்நாட்டுப் பிரதமர் வென் ஜியாபோ கூறினார்.
இந்திய- சீன உறவுகளில் திபெத் விவகாரம் மிகவும் உணர்வுபூர்வமானது. ஆனால், இதில் இருதரப்பும் விரிவான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.
"அந்த உடன்பாடுகளை இந்திய அரசு பின்பற்றும் என்றும், அதனடிப்படையில் இச்சிக்கலை முறையாகக் கையாளும் என்றும் நான் நம்புகிறேன்" என்றார் வென் ஜியாபோ.