பாகிஸ்தானில் அமைய உள்ள புதிய கூட்டணி அரசின் பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரியே இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் மக்தூம் அமின் ஃபாஹிம் கூறியுள்ளார்.
ஜர்தாரியை சந்தித்த பேசிய ஃபாஹிமிடம் இன்னமும் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு "பாகிஸ்தானில் அமைய உள்ள கூட்டணி அரசின் பிரதமராக ஜர்தாரியே இருக்க வேண்டும். அவருக்கு அனைவரும் ஆதரவாக இருப்போம்." என்றார்.
மேலும், "ஜர்தாரியிடம் நான் எனது கருத்தை தெரிவித்தேன், முடிவு எடுப்பது அவர் கையில் தான் உள்ளது" என்றும் ஃபாஹிம் கூறினார்.