இந்திய- சீன எல்லைப் பிரச்சனை மிகவும் சிக்கலானது என்றும், அதை ஓரு இரவில் பேசித் தீர்க்க முடியாது என்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோ கூறினார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த வென் ஜியாபோ "நீண்ட காலமாகத் தொடரும் இது போன்ற சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பது எளிதான காரியமல்ல. இந்தப் பிரச்சனையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது" என்றார்.
மேலும், "தங்களின் எல்லைப் பிரச்சனையை இருதரப்பிற்கும் சாதகமாகவும், சமமாகவும் தீர்த்துக் கொள்வதில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் மிகவும் முனைப்புடன் உள்ளன. பேச்சு துவங்கிய காலம் முதல் தற்போது வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.