பாகிஸ்தானில் வெளிநாட்டவரை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற இத்தாலிய உணவு விடுதியில் நேற்றிரவு குண்டு வெடித்தது. பல மைல் தூரத்துக்கு இந்த குண்டுவெடி சத்தம் கேட்டது.
குண்டுவெடிப்பில் உணவு விடுதி சுவர் தரை மட்டமானது. இந்த விபத்தில் துருக்கியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர். இந்த உணவு விடுதியில் பாகிஸ்தானில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் கூடுவது வழக்கம். அவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் தற்போது குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் வெளிநாட்டவரை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.