Publish Date: Sat, 15 Mar 2008 (19:00 IST)
Updated Date: Sat, 15 Mar 2008 (18:59 IST)
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் பலியானதுடன் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சூயிடோங்பிங் என்ற அந்த நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்ட போது 18 பேர் வேலை செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதுடன், காயமடைந்த 4பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சீனாவில் கடந்த ஆண்டு மட்டும் இது போன்ற நிலக்கரி சுரங்க விபத்து காரணமாக கிட்டத்தட்ட 3,800 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.