கம்யூனிஸ்ட் நாடான சீனாவின் அதிபராக ஹூ ஜிண்டாவோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான 65 வயதாகும் ஹு ஜிண்டாவ் அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு 2012 வரை அதிபராக மீண்டும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீன நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரசில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 2,965 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் ஹூ ஜிண்டாவோ 99.7 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு பெற்றார். மேலும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஹூ ஜிண்டாவோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒரு முடிவுதான் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் அதிகாரம் வாய்ந்த அரசியல் விவகார நிலைக்குழுவின் உறுப்பினரான 54 வயதாகும் ஜின்பிங் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.