திபெத் தலைநகர் லாசாவில் சீன அடக்கு முறைக்கு எதிராக பெளத்த துறவிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக அரசு பத்திரிகை இன்று தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற கலவரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட இரண்டு பேர் அப்பாவிகள் என்று மண்டல அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக மேற்கோள்காட்டி 'சின்குவா' பத்திரிகை செய்தியில் கூறியுள்ளது.
கலவரத்தில் இரண்டு ஓட்டல் தொழிலாளர்கள், இரண்டு கடை உரிமையாளர்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 7ல் இருந்து 10 ஆக உயர்ந்துள்ளதாகவும், இறந்தவர்களில் வெளிநாட்டவர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளது.
சீன அடக்கு முறையை எதிர்த்து தலைநகர் லாசாவில் பெளத்த துறவிகள் தலைமையில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், சீன படையினருடன் ஏற்பட்ட மோதலில் வாகனங்கள், கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.