போரோஸ் அருகே 4 இந்திய சுற்றுலா பயணிகள் உட்பட 278 பேர் சென்ற கியோர்கிஸ் என்ற கப்பல் கடல் சீற்றத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்த கப்பலில் பயணம் செய்தனர். கடல் கொந்தளிப்பில் சிக்கிய இந்த கப்பலில் இருந்தவர்களை கிரேக்க அதிகாரிகள் மீட்டு ஏதென்ஸ் அருகே உள்ள போரோஸ் கடற்கரைக்கு பத்திரமாக அழைத்து வந்தனர். மீட்பு பணியில் மூன்று ஹெலிகாப்டர்களும், கடற்படை கப்பலும், 12-க்கும் மேற்பட்ட படகுகளும் பயன்படுத்தப்பட்டன.
கப்பலில் ஏற்கனவே 35 மீட்பு படையினரும் இருந்ததால் சுற்றுலா பயணிகள் எந்த ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர். 'அனைத்து பயணிகளும் நலமாக உள்ளனர். யாருக்கும் எந்தவித காயமும், ஆபத்தும் இல்லை. நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்' என்று போரோஸ் மேயர் டிமித்ரிஸ் ஸ்டேரடிகோஸ் கூறினார்.