மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை 4.31 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர்.
ரிக்டர் அளவு மானியில் 5.7 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம் சியாபஸ் மாகாணத்தில் 78 கி.மீ. தூரத்தில் உள்ள கடல் பகுதியில் மையமாக கொண்டு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம், பொருள் சேதம் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. மெக்சிகோவில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாகாணத்தில் 70 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.