ஆஃப்கானிஸ்தானில் இன்று (வியாழக்கிழமை) நடந்த இருவேறு குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
காந்தகரில் இருந்து காபூல் மாகாணத்திற்குச் சென்று கொண்டிருந்த ரூமேனியப் படையினரின் வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
காபூல் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த சர்வதேசப் படையினரின் வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய கார் மோதியது.
இத்தாக்குதலில் படையினர், பொதுமக்கள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டதுடன், 70 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.