நாசா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து எண்டேவர் விண்வெளி ஓடம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று நண்பகல் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த விண்வெளி ஓடம் ஜப்பான் நாட்டின் கிபோ விண் ஆய்வுக் கூடத்திற்கான பாகங்களை சுமந்து சென்றது.
இதில் பயணம் செய்த 7 விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்தில் 16 நாட்கள் தங்கியிருப்பார்கள். சர்வதேச விண்வெளி மையத்திற்கான , விண்வெளி ஓட பயண த்தில் இதுவே அதிக நாள் பயணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பயணத்தின்போது கனடா நாட்டில் மூலம் தயாரிக்கப்பட்ட இரண்டு இயந்திர கைகள், உபகரணங்களையும் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.