துபாயில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் மத்திய உயர் கல்வி வாரிய (சி.பி.எஸ்.சி.) தேர்வு நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, அரபு நாடுகளில் உள்ள இந்திய பள்ளிகளின் தேர்வுகளை ஒரு மணிநேரம் தாமதமாக துவங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் தற்போது நடந்து வரும் சி.பி.எஸ்.சி.10-ம் வகுப்புத் தேர்வை 4,500 பேரும், 12-ம் வகுப்புத் தேர்வை 3,200 பேரும் எழுதுகின்றனர். துபாய் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சரியான நேரத்திற்குத் தேர்வு அறைக்கு செல்ல முடியவில்லை என்று மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் இந்திய அரசால் நடத்தப்படும் சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ஒரு மணிநேரம் கழித்து அதாவது, காலை 10.00 மணிக்கு துவங்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் முதல் முறையாக இந்தாண்டு பலத்த போக்குவரத்து நெரிசலை சந்தித்துள்ளோம். போக்குவரத்து நெரிசல் அரபு நாடுகளில் குறிப்பாக துபாய், சார்ஜாவில் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிற்பிற்குள்ளாக நாங்கள் விரும்பவில்லை என்று ஜுடே மயர்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.
இந்த ஆலோசனைக்கு பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், தேர்வு துவங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டால் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். பரபரப்பான காலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் எனது 10-ம் வகுப்பு படிக்கும் மகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறாள். நெரிசலில் சிக்கிக்கொள்ளும் போது மிகந்த பயம் கொள்கிறாள். இது அவளது தேர்வு எழுதும் திறனையும் பாதிக்கிறது என்கிறார்.
அரபு நாடுகளுக்கான சி.பி.எஸ்.இ. குழு தலைவர் செபாஸ்டின் அந்நாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இங்குள்ள போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை நன்கு அறிவேன். தேர்வு நேரத்தை மாற்றும் கோரிக்கையை சி.பி.எஸ்.இ.யிடம் கண்டிப்பாக வலியுறுத்துவேன். அடுத்த ஆண்டு முதல் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது தேர்வு நேரத்தை தள்ளிlf துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு அரபுநாடுகளில் மட்டும் தேர்வு நேரத்தை மாற்ற அமைப்பது கடினம். உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இந்தமுறை அமுல்படுத்த வேண்டிவரும்” என்றார்.