மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 8 படையினர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயம் அடைந்தனர்.
இலங்கையில் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று சிறிலங்க படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
இதேபோல மன்னாரின் மேற்குப் பகுதியில் பரப்பாங்கண்டலில் இருந்து காத்தான்குளம் நோக்கி சிறிலங்க படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகளும் புலிகளால் முறியடிக்கப்பட்டதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
மேலும், மன்னார் அடம்பன் பாலைக்குழி பகுதியில் சிறிலங்க படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் நேற்று மோதல் நீடித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
இந்த மூன்று முறியடிப்புத் தாக்குதல்களிலும் சிறிலங்கா தரப்பைச் சேர்ந்த 8 படையினர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்தனர். புலிகளின் தரப்பில் சேதம் எதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.