அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் மேலும் ஒரு மாகாணத்தில் பாரக் ஒபாமாவிற்கு வெற்றி கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, கருப்பினத்தவரான பாரக் ஒபாமா மற்றும் சிலர் போட்டியிட்டனர். இதில் ஹிலாரியும் ஒபாமாவும் முன்னணியில் இருந்ததையடுத்து மற்றவர்கள் விலகிவிட்டனர்.
இந்நிலையில் லயாமிங் மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஒபாமா 58 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஹிலாரிக்கு 41 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன.
இதனால் ஒபாமா தொடர்ந்து முன்னணியில் உள்ளார். அவருக்கு 1,578 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. ஹிலாரிக்கு 1,468 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. யாருக்கு அதிகப் பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கிறதோ அவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.
அடுத்ததாக மிசிசிபி மாகாணத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு ஆப்பிரிக்க வம்சாவளி மக்களே அதிகம் உள்ளனர். இதனால் ஒபாமாதான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.