குவைத்தில் சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 14 மருத்துவர்கள் அந்நாட்டு சுகாதார அமைச்சக்கத்தின் பணியில் இருந்து விலகியுள்ளனர்.
இவர்கள் போதிய பதவி உயர்வு, திருப்தியான சம்பளம் இல்லாததால் வேலையை விட்டு விலகியதாக கூறியுள்ளனர்.
'எங்களது மருத்தவ பட்டம் இந்திய பல்கலைகழகங்களால் உரிய முறையில் சான்று அளிக்கப்படவில்லை என்றும், இதனால், 14 இந்திய மருத்துவர்கள் 'சட்டவிரோதமானவர்கள்' என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இந்திய மருத்துவர் ஒருவர் அரபு நாட்டு பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.
வேலையை விட்டு விலகிய மருத்துவர்களின் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட இந்திய அமைச்சகம் ஆய்வு செய்து, இதற்கு ஒரு தீர்வு காண சாதாரணமாக 8 மாதங்கள் ஆகலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவர் கூறுகையில், குவைத் அரசு "வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும்போது உரிய முறையில் சான்றிதழ்களை ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்போது அதை அவர்கள் செய்யவில்லை. குவைத் அரசின் செயல்பாடுகள் இந்திய மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சில மருத்துவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெறாமலேயே திரும்பி சென்று விட்டனர்.
பெரும்பாலான மருத்துவர்கள் இங்கு பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. குவைத்தில் உள்ள இந்திய மருத்துவர் சங்கத்தை அணுக திட்டமிட்டுள்ளோம். அவர்கள் இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு காண்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.