குஜராத் அருகில் அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் அத்துமீறிக் கடத்திச் சென்றுள்ளனர்.
குஜராத்தில் இருந்து நில்சாகர், மோதிசாகர், கிஸ்மாட் ஆகிய 3 விசைப் படகுகளில் சென்ற 14 மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்குவந்த பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர், அவர்களை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளதாக தேசிய மீனவர் சங்கச் செயலர் மணீஸ் லோதாரி தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் கடத்தப்படும் சம்பவங்களைத் தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.