இலங்கை அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாற்றில் இருந்து கோட்டைகட்டிய விகாரை நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இதில் மூன்று சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.