Publish Date: Tue, 04 Mar 2008 (17:12 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (17:12 IST)
மன்னாரில் சிறிலங்க ராணுவம் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்க ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
தட்சணாமருதமடுப் பகுதியில் தங்கள் வீடுகளை பார்வையிட டிராக்டரில் சென்ற பொதுமக்களின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.