Publish Date: Tue, 04 Mar 2008 (15:29 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (15:26 IST)
லாகூரில் உள்ள பாகிஸ்தான் கடற்படைக் கல்லூரியில் இன்று அடுத்துடுத்து நடந்த 4 குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.
கல்லூரியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு குறித்துத் தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு ஏராளமான ஆம்புலன்சுகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கல்லூரி வளாகத்திற்குள் புகை மூட்டமாக இருப்பதால் குண்டுவெடிப்பிற்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்றும் லாகூர் காவல் அதிகாரி மாலிக் முகமது இக்பால் தெரிவித்தார்.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Webdunia
Publish Date: Tue, 04 Mar 2008 (15:29 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (15:26 IST)