Publish Date: Mon, 03 Mar 2008 (15:12 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:46 IST)
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமர் புடினின் ஆதரவாளர் டிமித்ரி மெத்வேதேவ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஓட்டு எண்ணிக்கை முடிவில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புடினின் ஆதரவாளரான டிமித்ரி மெத்வேதேவ் 69 விழுக்காடு வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கென்னடி சுயுகானாவ் 18.5 விழுக்காடு வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். விளாடிமர் சிரினோவ்ஸ்கி 10.5 விழுக்காடு வாக்குகளும், ஆன்ட்ரெய் போக்தனாவ் 1.3 விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளனர்.
'42 வயதான டிமித்ரி மெத்வேதேவ் 10.9 கோடி மக்களின் வாக்குகளை பெற்று யாரும் தொட முடியாத இடத்தை பிடித்துள்ளார்' என்று அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிமித்ரிக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அதிபர் விளாடிமர் புடின் கூறுகையில், "இது போன்ற வெற்றி அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கும்" என்றார்.
Webdunia
Publish Date: Mon, 03 Mar 2008 (15:12 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:46 IST)