Publish Date: Fri, 29 Feb 2008 (16:25 IST)
Updated Date: Fri, 29 Feb 2008 (16:24 IST)
மன்னாரில் சிறிலங்க படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மனனார் பாண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடந்ததாகவும், இம்மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் படுகாயமடைந்ததாகவும் புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
இதேபோல, மன்னார் கட்டுக்கரை குளப்பகுதியில் நேற்று காலை முதல் பிற்பகல் 12.30 மணி வரை சிறிலங்க படையினர் நடத்திய தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர்.
Webdunia
Publish Date: Fri, 29 Feb 2008 (16:25 IST)
Updated Date: Fri, 29 Feb 2008 (16:24 IST)