Publish Date: Fri, 29 Feb 2008 (15:49 IST)
Updated Date: Fri, 29 Feb 2008 (15:48 IST)
கொழும்பு துறைமுகம் அருகில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 3 காவலர் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க ராணுவத்திற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து உள்ளது.
இந்நிலையில், கொழும்பு துறைமுகம் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள கட்டடம் ஒன்றின் அருகில் திடீரென்று குண்டு வெடித்தது. இதில் அக்கட்டடம் நொறுங்கியது. அதன் அருகில் நின்றிருந்த 3 காவலர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தற்கொலைத் தாக்குதல் என்றும், இதை நடத்தியது விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்றும் சிறிலங்கக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், தாக்குதல் நடந்த கட்டடத்தின் உள்ளிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.