பாகிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசு தங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க அயலுறவு துறை பேச்சாளர் டாம் கேசே கூறுகையில், பாகிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மட்டுமன்றி அரசியல், பொருளாதார விடயங்களிலும் அமெரிக்காவுடன் உறுதியாக நிற்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் பதவி விலக வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை பற்றிக் கேட்டதற்கு, "பாகிஸ்தானில் அமையவுள்ள அரசு, அங்குள்ள சவால்களைச் சந்தித்து வெற்றிகாணும் வகையில் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். உள்நாட்டு விவகாரங்களில் அவர்களுக்குக் குறிப்பிட்ட தீர்வைக் கூறுவதற்கு நாங்கள் முயற்சிக்க மாட்டோம்" என்றார் கேசே.