பாகிஸ்தானில் நிலையான தன்னிச்சையாக இயங்கும் திறனுடைய அரசு உருவாகும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமைதி, நிலைத்தன்மை சார்ந்த விடயங்கள், அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகளுக்கு மரியாதை, சுதந்திரமான நீதித் துறையை மீட்டமைத்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படையான விடயங்களுக்கு பாகிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலை வரவேற்று ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“பாகிஸ்தானில் புதிய ஜனநாயகம் உருவாவதற்கு தேர்தல் வழிவகுத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.