இந்தோனேசியாவில் கடுமையான இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்த்தாவில் இருந்து 600 கி.மீ. மேற்கே கடற்கரை மாகாணமான பெங்ககுலுவில் கடலுக்கு அடியில் 35 அடி ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.6. ரிக்டராகப் பதிவானது.
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கும் இங்கும் ஓடினர். சில வீடுகளில் விரிசல் விழுந்துள்ளது.
திடீரென எங்கள் வீடு குலுங்தியதை கண்டு நாங்கள் பயந்து விட்டோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனடியாக வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டோம் என்றார் அப்பகுதியைச் சேர்ந்த இர்வான்.
கடந்த செப்டம்பர் மாதம் இதே பகுதியில் 8.4 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.