அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து தாம் இன்னும் விலகவிடவில்லை என்றார் ஹிலாரி கிளிண்டன்.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் தொடர்ந்து 11 மாநிலங்களில் தோல்வியைச் சந்தித்துள்ள ஹிலாரியின் வெற்றி வாய்ப்பு குறித்து பலரும் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், டெக்ஸாஸ், ஓஹிகோ ஆகிய மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலுக்கு தயாராகி வருவதாகக் கூறினார் ஹிலாரி.
அண்மையில் டெக்ஸாஸில் ஒபாமாவுடன் நடந்த விவாதத்தின் முடிவில் பேசிய ஹிலாரி, என்ன நடந்தாலும் நாங்கள் இருவரும் ஒன்றுமையாக இருப்போம் என்றார். தமது வெற்றி குறித்து அவருக்கே சந்தேகம் எழுந்துவிட்டது என்பதையே இந்தப் பேச்சு காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
தாம் ஓஹியோ, டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெறுவேன் என உறுதியாக நம்புவதாக ஹிலாரி தெரிவித்துள்ளதன் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.