Newsworld News International 0802 23 1080223030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல் 6 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் கைது!

Advertiesment
பா‌கி‌ஸ்தா‌ன் மீனவர்கள் குஜராத் மனிஷ் லதோரி
, சனி, 23 பிப்ரவரி 2008 (16:25 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌த்ததாக 6 இ‌ந்‌‌திய ‌மீனவ‌ர்களை‌ப் பா‌கி‌ஸ்தா‌ன் கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர்.

இது குறித்து குஜராத் இளைஞர் காங்கிரஸ் மீனவர் பிரிவுத் தலைரும், தேசிய மீனவர்கள் சங்கத் தலைவருமான மனிஷ் லதோரி கூறுகை‌யி‌ல், "தண்டல் ராகேஷ் கொண்டா என்பவருக்கு சொந்தமான படகில் அரபிக் கடலில் மீன் பிடித்த 6 மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கராச்சியில் உள்ள முகமது அலிசா மீனவர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் எனக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது" என்றார்.

இதன் மூலம் பாகிஸ்தான் கைது செய்துள்ள இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 404-ஆகவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 347-ஆகவும் உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil