Publish Date: Sat, 23 Feb 2008 (13:47 IST)
Updated Date: Sat, 23 Feb 2008 (13:47 IST)
சிறிலங்க தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் குண்டுவெடித்து 8 மாதக் குழந்தை உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பேருந்து முற்றிலும் உருக்குலைந்து விட்டதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் பேருந்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த நபர் என்றும் சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த லவனியா பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
Webdunia
Publish Date: Sat, 23 Feb 2008 (13:47 IST)
Updated Date: Sat, 23 Feb 2008 (13:47 IST)