Publish Date: Fri, 22 Feb 2008 (20:17 IST)
Updated Date: Fri, 22 Feb 2008 (20:16 IST)
பாகிஸ்தானின் பிரதமராக, பாகிஸ்தான் மக்கள் கட்சி துணைத் தலைவர் மக்தூம் அமின் பாஹிம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீஃப்பும் நேற்று நடத்திய பேச்சுக்கு பின்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசு அமைக்க இருப்பதாக நேற்று இரவு அறிவித்தனர். இருந்த போதிலும், புதிய ஆட்சியை வழி நடத்தி செல்லும் பிரதமர் யார் என்று அறிவிக்கவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் இன்று, நவாஸ்-சர்தாரி இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி ஒப்பந்தம் குறித்தும், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமராக, பாகிஸ்தான் மக்கள் கட்சி துணைத் தலைவர் மக்தூம் அமின் பாஹிம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாஹிம், கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், அதிபர் முஷாரஃப்பை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Fri, 22 Feb 2008 (20:17 IST)
Updated Date: Fri, 22 Feb 2008 (20:16 IST)