பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்க இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்ட நிலையில், அடுத்த பிரதமர் யார் என்பதை இன்று தேர்வு செய்கின்றன.
பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்பும் நேற்று நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசு அமைக்க இருப்பதாக நேற்று இரவு அறிவித்தனர்.
இருந்தபோதிலும், புதிய ஆட்சியை வழி நடத்தி செல்லும் பிரதமர் யார் என்று அறிவிக்கவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் இன்று கூட்டம் நடத்தி நவாஸ்-சர்தாரி இடையே ஏற்பட்டுள்ள இந்த கூட்டணி அரசு ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அந்த கட்சி செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி தேர்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.