Publish Date: Mon, 18 Feb 2008 (14:21 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)
மன்னாரில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில், படையினர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
மன்னார் பாலைக்குழிப் பகுதியில் இருந்து அடம்பன் நோக்கிச் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில், படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், 8 படையினர் காயமடைந்ததாக புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணயளவில் நடந்த இந்த மோதலில், எம்.ஐ.-24 வகை ஹெலிகாப்டர்களையும், பீரங்கிகளையும் படையினர் பயன்படுத்தியதாகவும், அதற்கேற்றவாறு விடுதலைப் புலிகளும் சளைக்காமல் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அச்செய்தி மேலும் கூறுகிறது.
இத்தாக்குதலில் பெரும் இழப்புகளைச் சந்தித்த சிறிலங்காப் படையினர் தங்கள் நிலைகளுக்குப் பின்வாங்கினர். இது தொடர்பாக சிறிலங்க அரசு தரப்பில் உடனடியாக விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Webdunia
Publish Date: Mon, 18 Feb 2008 (14:21 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)