சீனாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று வடக்கு பிலிப்பைன்ஸ் அருகில் கடலில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த 28 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் ஜின்ஷான் என்ற சரக்குக் கப்பல், பிலிப்பைன்சின் கேப் போஜியேடர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கடலில் மூழ்கியதாக, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கமாண்டர் அர்மன்டோ பலிலோ தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீட்புப் படகுகள், ஹெலிகாப்டர் உதவியுடன் அக்கபலில் இருந்த 28 பேரைத் தேடி வருவதாகவும், ஆனால் இதுவரை ஒருவர் கூட மீட்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.